நீதிபதிகளின் சம்பளத்தில் PAYE Tax அறவிடுவதற்கு எதிரான தடை நீடிப்பு

மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரை, நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போது செலுத்த வேண்டிய (PAYE) வரியை அறவிடுவதை தடுக்கும் உத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ. ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுவோரிடமிருந்து அறவிடும் வகையில் அரசாங்கத்ததினால் வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமது சம்பளத்திலிருந்து குறித்த வரியை அறிவிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து, இலங்கை நீதிமன்ற அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் ஆகியன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2 மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இன்றையதினம் (09) குறித்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதியரசர்களான சோபித ராஜகருணா, தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அம்மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து வரி செலுத்துவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடையை நீடித்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Add new comment

Or log in with...