இரத்தினபுரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் இதொகாவின் வேட்பாளர்களை ஆதரித்து  இதொகாவின் தலைவர் செந்தில் தொண்டமான் கடந்தவாரம் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

வெவெத,  ஹெரமிட்டிகல,  ராசகல வெலேகுப்ரா, கபரகல உட்பட பல்வேறு தோட்டங்களிலும் பலாங்கொடை, இரத்தினபுரி உள்ளிட்ட நகரங்களிலும் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

இந்த பிரசாரங்களில் இ.தொ.காவின் உப தலைவர் ராஜாமணி, இரத்தினபுரி மாவட்ட அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் , சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இரத்தினபுரி இரத்னேஸ்வரம் மற்றும் பலாங்கொடை முத்துமாரி அம்மன் ஆலயங்களில் இதொகாவின் தலைவர் விசேட வழிபாடுகளில் இதன்போது ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...