Asia Cup 2022; SLvBAN: இலங்கை 2 விக்கெட்டுகளால் வெற்றி

- அடுத்த கட்ட சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவு
- அடுத்து விளையாடும் போட்டிகள் வெளியீடு
- பங்களாதேஷ் அணி தொடரிலிருந்து வெளியேற்றம்

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று (01) இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பில், அபிப் ஹுஸைன் 39 ஓட்டங்களையும், மெஹ்தி ஹஸன் மிராஸ் 38 ஓட்டங்களையும், மஹ்முதுல்லாஹ் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் வணிந்து ஹசரங்க, சமிக கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். டில்ஷான் மதுசங்க, மஹீஷ் தீக்சன, அசித பெனாண்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு 184 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.

குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 20 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இருப்பினும், நடுவரிசை வீரர்கள் சோபிக்கத் தவறியதால் இலங்கை அணியின் வெற்றி கேள்விக்குறியாகியது.

இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் தசுன் சானக 45 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

ஆயினும் கடைசியாக வந்த வீரர்கள் பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்துகளை சமாளித்து, போட்டியை இறுதிவரை கொண்டு சென்றனர்.

இறுதியில் பங்களாதேஷ் அணி பந்துவீச்சாளர்கள் 4 நோ போல்களையும் 8 அகலப் பந்துகளையும் வீசி மிக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

இறுதியாக பெற வேண்டியிருந்த ஒரு ஓட்டமும் நோ-போல் மூலம் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, 184 என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் கடந்த இலங்கை அணி போட்டியில் வெற்றியீட்டி, ஆசிய கிண்ணத்தின் அடுத்த சுற்றான 4 அணிகள் விளையாடும் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அந்த வகையில் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளது.

போட்டியின் நாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.

Image

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதுவரை இடம்பெற்ற ரி20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்கு இதுவாகும்.

இதற்கு முன்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் அந்நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 183 என்ற வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணி கடந்திருந்தமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவாகியுள்ள இலங்கை அணியின் போட்டிகள்

  • இலங்கை - ஆப்கானிஸ்தான்: செப்டெம்பர் 04
  • இலங்கை - ஹொங்கொங்/ பாகிஸ்தான்: செப்டெம்பர் 07
  • இலங்கை - இந்தியா : செப்டெம்பர் 08 
 
BANGLADESH INNINGS (20 overs maximum)
BATTING   R B M 4s 6s SR
Mehidy Hasan Miraz  b de Silva 38 26 36 2 2 146.15
Sabbir Rahman  c †Mendis b Fernando 5 6 14 1 0 83.33
Shakib Al Hasan (c) b Theekshana 24 22 44 3 0 109.09
Mushfiqur Rahim † c †Mendis b Karunaratne 4 5 7 0 0 80.00
Afif Hossain  c de Silva b Madushanka 39 22 48 4 2 177.27
Mahmudullah  c Karunaratne b de Silva 27 22 38 1 1 122.72
Mosaddek Hossain  not out 24 9 18 4 0 266.66
Mahedi Hasan  lbw b Karunaratne 1 2 7 0 0 50.00
Taskin Ahmed  not out 11 6 8 0 1 183.33
Extras (b 4, lb 6) 10  
TOTAL 20 Ov (RR: 9.15) 183/7
 
Fall of wickets: 1-19 (Sabbir Rahman, 2.5 ov), 2-58 (Mehidy Hasan Miraz, 6.5 ov), 3-63 (Mushfiqur Rahim, 7.6 ov), 4-87 (Shakib Al Hasan, 10.3 ov), 5-144 (Afif Hossain, 16.4 ov), 6-147 (Mahmudullah, 17.1 ov), 7-159 (Mahedi Hasan, 18.1 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Dilshan Madushanka 4 0 26 1 6.50 11 3 0 0 0
Maheesh Theekshana 4 0 23 1 5.75 10 1 1 0 0
Asitha Fernando 4 0 51 1 12.75 6 4 3 0 0
Wanindu Hasaranga de Silva 4 0 41 2 10.25 8 4 2 0 0
Chamika Karunaratne 4 0 32 2 8.00 6 3 0 0 0
 
SRI LANKA INNINGS (Target: 184 runs from 20 overs)
BATTING   R B M 4s 6s SR
Pathum Nissanka  c Mustafizur Rahman b Ebadot Hossain 20 19 24 2 1 105.26
Kusal Mendis † c Taskin Ahmed b Mustafizur Rahman 60 37 77 4 3 162.16
Charith Asalanka  c Mahmudullah b Ebadot Hossain 1 3 4 0 0 33.33
Danushka Gunathilaka  c Taskin Ahmed b Ebadot Hossain 11 6 13 2 0 183.33
Bhanuka Rajapaksa  c sub (Mohammad Naim) b Taskin Ahmed 2 4 10 0 0 50.00
Dasun Shanaka (c) c Mosaddek Hossain b Mahedi Hasan 45 33 48 3 2 136.36
Wanindu Hasaranga de Silva  c Mahedi Hasan b Taskin Ahmed 2 3 6 0 0 66.66
Chamika Karunaratne  run out (Shakib Al Hasan) 16 10 22 1 0 160.00
Maheesh Theekshana  not out 0 2 14 0 0 0.00
Asitha Fernando  not out 10 3 5 2 0 333.33
Extras (lb 5, nb 4, w 8) 17  
TOTAL 19.2 Ov (RR: 9.51) 184/8
 
Did not bat: Dilshan Madushanka
Fall of wickets: 1-45 (Pathum Nissanka, 5.3 ov), 2-48 (Charith Asalanka, 5.6 ov), 3-67 (Danushka Gunathilaka, 7.4 ov), 4-77 (Bhanuka Rajapaksa, 8.5 ov), 5-131 (Kusal Mendis, 14.3 ov), 6-139 (Wanindu Hasaranga de Silva, 15.3 ov), 7-158 (Dasun Shanaka, 17.5 ov), 8-171 (Chamika Karunaratne, 18.5 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Mustafizur Rahman 4 0 32 1 8.00 8 3 1 0 0
Taskin Ahmed 4 0 24 2 6.00 9 3 0 0 0
Shakib Al Hasan 4 0 31 0 7.75 7 1 2 0 0
Ebadot Hossain 4 0 51 3 12.75 8 3 2 6 2
Mahedi Hasan 2.2 0 30 1 12.85 2 4 0 0 2
Mehidy Hasan Miraz 1 0 11 0 11.00 0 0 1 0 0

 


Add new comment

Or log in with...