IPL 9ஆவது தொடரை கைப்பற்றியது சென்னை சுப்பர் கிங்ஸ்; இது 4ஆவது கிண்ணம்

 

 

ஐபிஎல் 9ஆவது தொடரான இவ்வருட IPL 2021 தொடரின் கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

அதற்கமைய, இத்தொடரை 4ஆவது முறையாக தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றி கொண்டுள்ளது.

நேற்று (15) கொல்கத்தா மற்றும் சென்னை அணிக்கு இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றுள்ளது.

குவாலிபையர் 2 போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணியுடன் பைனல் போட்டியில் கொல்கத்தா அணி இணைந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணியின் தலைவர் மோர்கன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.  இரு அணிகளும் முந்தைய போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களம் இறங்கியது.  தோனி தனது 300ஆவது ரி20 போட்டியில் தலைவராக களம் இறங்கினார். 

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.  சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.  இன்றைய ஆட்டத்தில் 32 ஓட்டங்கள் அடித்த ருத்ராஜ் ஐபிஎல் 2021 அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் சேர்த்தது ருத்ராஜ் மற்றும் பாப் டு பிளசி ஜோடி.  அதன்பின் களமிறங்கிய ரொபின் உத்தப்பா 15 பந்தில் 3 சிக்சர்கள் உட்பட 31 ஓட்டங்கள் அடித்தார்.  சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் என கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களை சிதறடித்தார்.  கடைசியாக இறங்கிய மொயின் அலியும் ஆட்டமிழக்காது 20 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரி உட்பட 37 ஓட்டங்கள் அடித்தார்.

59 பந்துகளில் 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என 86 ஓட்டங்கள் அடித்த பாப் டு பிளசி ஐபிஎல் 2021ல் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்ததோடு, 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டார் பாப் டு பிளசி.  20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது. சென்னை அணியில் தோனி, ராயுடு, ஜடேஜா போன்ற வீரர்கள் களம் இறங்காமலேயே  கேகேஆர்க்கு  ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்தது.

அதன்பின் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். கில் 51 ஓட்டங்களும், ஐயர் 50 ஓட்டங்களும் விளாசினார்.

ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்ற நிலை வந்தது. 11ஆவது ஓவரை வீசிய தாகூர் போட்டியை சென்னை பக்கம் திருப்பினார். அதன் பின் சிறப்பாக பந்து வீசிய சென்னை பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்த போட்டியில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக பப் டு பிளசிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

தொடரின் நாயகனாக ரோயல் சலேஞ்சர்ஸ் அணியின் ஹர்ஷல் பட்டேல் தெரிவானார்.

IPL இதுவரை

  • அதிக விக்கெட்டுகளை கைப்பறியவர்: லசித் மாலிங்க (170)
  • அதிக ஓட்டங்களை எடுத்தவர்: விராத் கோலி (6,076)
  • அதிக கிண்ணத்தை கைப்பற்றிய அணி: மும்பாய் (05)

 

CHENNAI SUPER KINGS INNINGS (20 OVERS MAXIMUM)
BATTING   R B M 4s 6s SR
Ruturaj Gaikwad  c Shivam Mavi b Narine 32 27 41 3 1 118.51
Faf du Plessis  c Iyer b Shivam Mavi 86 59 104 7 3 145.76
Robin Uthappa  lbw b Narine 31 15 26 0 3 206.66
Moeen Ali  not out 37 20 36 2 3 185.00
Extras (b 1, lb 1, nb 1, w 3) 6  
TOTAL (20 Ov, RR: 9.60) 192/3  
Fall of wickets: 1-61 (Ruturaj Gaikwad, 8.1 ov), 2-124 (Robin Uthappa, 13.3 ov), 3-192 (Faf du Plessis, 19.6 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Shakib Al Hasan 3 0 33 0 11.00 6 2 3 0 0
Shivam Mavi 4 0 32 1 8.00 8 1 2 0 0
Lockie Ferguson 4 0 56 0 14.00 4 7 2 2 0
Varun Chakravarthy 4 0 38 0 9.50 5 2 2 0 1
Sunil Narine 4 0 26 2 6.50 6 0 1 1 0
Venkatesh Iyer 1 0 5 0 5.00 2 0 0 0 0
 
 
KOLKATA KNIGHT RIDERS INNINGS (TARGET: 193 RUNS FROM 20 OVERS)
BATTING   R B M 4s 6s SR
Shubman Gill  lbw b Chahar 51 43 74 6 0 118.60
Venkatesh Iyer  c Jadeja b Thakur 50 32 56 5 3 156.25
Nitish Rana  c du Plessis b Thakur 0 1 3 0 0 0.00
Sunil Narine  c Jadeja b Hazlewood 2 2 6 0 0 100.00
Eoin Morgan (c) c Chahar b Hazlewood 4 8 32 0 0 50.00
Dinesh Karthik  c Rayudu b Jadeja 9 7 8 0 1 128.57
Shakib Al Hasan  lbw b Jadeja 0 1 7 0 0 0.00
Rahul Tripathi  c Ali b Thakur 2 3 4 0 0 66.66
Lockie Ferguson  not out 18 11 27 1 1 163.63
Shivam Mavi  c Chahar b Bravo 20 13 22 1 2 153.84
Varun Chakravarthy  not out 0 0 1 0 0 -
Extras (nb 1, w 8) 9  
TOTAL (20 Ov, RR: 8.25) 165/9  
Fall of wickets: 1-91 (Venkatesh Iyer, 10.4 ov), 2-93 (Nitish Rana, 10.6 ov), 3-97 (Sunil Narine, 11.3 ov), 4-108 (Shubman Gill, 13.2 ov), 5-119 (Dinesh Karthik, 14.5 ov), 6-120 (Shakib Al Hasan, 14.6 ov), 7-123 (Rahul Tripathi, 15.4 ov), 8-125 (Eoin Morgan, 16.3 ov), 9-164 (Shivam Mavi, 19.5 ov)
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
Deepak Chahar 4 0 32 1 8.00 10 4 1 1 0
Josh Hazlewood 4 0 29 2 7.25 10 2 1 2 0
Shardul Thakur 4 0 38 3 9.50 11 3 1 4 1
Dwayne Bravo 4 0 29 1 7.25 9 1 2 0 0
Ravindra Jadeja 4 0 37 2 9.25 9 3 2 1 0