2019 கொரோனா தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்

2019 கொரோனா தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்-Corona Virus Disease 2019-Temporary Provisions Bill Certified by the Speaker

- ஓகஸ்ட் 23 முதல் நடைமுறையில்

2019 கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கடந்த திங்கட்கிழமை (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக அறிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கொவிட்-19 சூழ்நிலைகளின் காரணமாக சட்டத்தின் மூலம் விதிக்கப்படும் ஒரு விடயங்கள் உரிய கால எல்லைக்குள் மேற்கொள்வதற்கு முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களிலும் ஒரு சில நீதிமன்றங்களால் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்களிலும் அதற்கான மாற்று நீதிமன்றங்களை நியமிப்பது தொடர்பிலான ஏற்பாடுகளைச் செய்வதும் இதன் நோக்கமாகும்.

அத்துடன், கொவிட் நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கும் தொலைத்தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூர முறைமைகளின் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்துவதற்கும், கொவிட் சூழ்நிலைகள் காரணமாக ஒப்பந்தஞ்சார் கடப்பாடுகளை புரிய இயலாமல் போகின்ற குறித்த சில ஒப்பந்தங்களுக்கும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புபட்ட ஏனைய கருமங்களையும் மேற்கொள்ள இந்த தற்காலிக ஏற்பாடுகளை வழங்குவதானது இந்த சட்டமூலத்தின் மூலம் முன்னெடுக்கப்படும்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 17ஆம் இலக்க 2019 கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் கடந்த 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


Add new comment

Or log in with...