பசில் எனும் பெரும் விருட்சம்...

  • பசில் இந்திரஜாலம் புரிபவர் அல்ல என்றாலும் அவர் செயல் வீரர்
  • 2015ல் அரசியல் பழிவாங்கல் மூலம் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னர் வெற்றியின் மூலம் நல்ல பலனை கொண்டு வந்தார்.
  • கொவிட் 19 தொற்றால் முழு உலகமுமே பாதிப்படைந்துள்ளது. வர்த்தக, கைத்தொழில், சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. அதனால் பசிலின் வருகை அரசாங்கத்துக்கு பலமாகும்.
  • ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் யுத்தத்தின்போது தளபதியாக இருந்தவர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அவரின் அபிவிருத்திப் போருக்கு தளபதியாக இருந்தவர் பசில் ராஜபக்‌ஷ
  • பசிலோடு விரோதம் பாராட்ட நினைக்கும் அரசியல்வாதிகள் இருந்தால் அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

பலசாலி கண் விழிக்கும் போது வாய்ச்சொல் வீரர்கள் பயப்படுவார்கள்'' என்பது நவீன கூற்றாகும். இன்று இலங்கை அரசியலிலும் அதுவே நடந்துள்ளது. அண்மைக் காலங்களில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றப்பட்ட சாரைப்பாம்பு போல் சில சமூக ஊடகங்களும் ஏனைய ஊடகங்களும் நடந்து கொள்கின்றன.

இது வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் அல்ல’ பசில் ரோஹன ராஜபக்‌ஷ ‘எனப்படும் இலங்கை அரசியல் சரித்திரத்தை தலைகீழாக மாற்றிய மனிதரின் வருகை காரணமாகத்தான்.

கல்லடி படுவது காய்த்த மரமே. அது உலக நியதி. தங்களுக்கு சவாலாக உள்ளவர்கள் மீது தான் கதை கட்டுவதும், சேறு பூசுவதும் வழமையாகும்.

பசிலின் அரசியல் வாழ்க்கை
பசில் ராஜபக்‌ஷ ஆக்கத்திறன் மிக்க அரசியல்வாதி என்பதை நாட்டுக்கு நிரூபித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்னும் பாரிய அரசியல் சக்தியை நாட்டில் உருவாக்கியுள்ளார். அவரின் கனவை நனவாக்க தேவையான அடித்தளம் அவர் இந்த கட்சியை உருவாக்கியதாலேயே போடப்பட்டது. இலக்கில்லாத தேசிய சக்திகளுக்கு இலக்கொன்றை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவரே ஆவார். அவ்வாறான இலக்குகளில் ஒருவர் வேறு யாருமில்லை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ. அவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததன் மூலம் அந்த தேசிய சக்தியை வலுவானதாக்கினார். மஹிந்த ராஜபக்‌ஷவால் ஏற்படுத்தப்பட்ட தேசிய புத்துணர்ச்சியை இரண்டாவது இன்னிங்சில் பயன்படுத்திக் கொண்டார்.

2015ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியை அவர் மீது சுமத்திய போது அவர் கோபம் கொள்ளவில்லை. சரியோ தவறோ இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். அவரின் சகோதரர்கள். உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் குறித்து மிக கவனமாக இருந்தார். தன்னை சிறையில் அடைத்து அரசியல் எதிரிகள் பெற்ற மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சில ஊடகங்களின் ஊடக விளையாட்டை சிறுபிள்ளைத்தனமாகவே அவர் பார்த்தார். அரசியலின் நாடித்துடிப்பு பற்றிய நல்ல புரிந்துணர்வுடன் காணப்பட்டார். அது தந்தை, பெரிய தந்தை மற்றும் சகோதரர்களின் அரசியல் நடவடிக்கையின் அனுபவத்தை அறிந்ததன் பனாலாகும்.

ஆனால் பசிலின் அரசியல் சித்தாந்தம் அவை அனைத்திலிருந்தும் மாறுபட்டது. பசில் புதிதாக சிந்திக்கும் அரசியல்வாதி. பொதுமக்கள் கூட்டமாக மெத மூலனவிற்கு சென்று மஹிந்தவை சந்திக்கும் போது, நுகேகொட எதிர்ப்பு காற்று ஆரம்பிக்கும்போது, நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றி அரசியல் தவறு என மக்கள் கருதும் போது, பசில் அந்த சக்தியை இப்பூமியில் யதார்த்தமாக்க சிந்தித்தார்.

பசிலுக்கு அரசியல் போட்டியாளர்கள் இருந்தாலும் அவர் யாருடனும் கோபப்படவில்லை. அதனால் அவருக்கு எந்த ஒரு கட்சியுடனும் பேரம் பேசும் திறன் இருந்தது. அந்தந்த கட்சிகளின் தனித்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்கும் விதம் பற்றி பசில் ராஜபக்‌ஷ தனது அரசியல் வாழ்க்கையில் நன்கு அறிந்திருந்தார். அதற்கான சரியான உதாரணம் 69 இலட்ச வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கமாகும்.

பசில் அந்த 69 இலட்சத்தை பெறுவதற்கான அடிப்படையை உருவாக்கியது ‘கிராமத்துக்கான உரையாடல்’ கொள்கைத் திட்டத்தை உருவாக்கியதன் மூலமாகும். 2015 தோல்வியின் பின்னர் அரசியல் பழிவாங்கல் மூலம் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னர் வெற்றியின் நல்ல சகுணத்தை கொண்டு வந்தது கிராமத்துடனான கலந்துரையாடல் மூலமாகும்.

கிராமம் கிராமமாகச் சென்று கிராம மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அதனை யதார்த்தமாக்கும் அடிப்படையை அதன் மூலமே ஏற்படுத்தினார். அதன் இறுதி பலன் சுபீட்சத்தின் நோக்காகும்.

பசிலின் பொருளாதார கொள்கை
பசிலின் பொருளாதார கொள்கையின் அடிப்படை அம்சமானது திவிநெகும. இன்று அநேகமான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அமைப்புகள், முதலாளிமார், சில ஊடகங்கள் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக சேறு பூசும் இந்த எதிர்க்கட்சியின் பொய் பிரசாரங்களை விட உண்மையில் மக்களின் துயரத்தை அறிந்த அரசியல்வாதி பசில் ராஜபக்‌ஷ என்பதாலாகும்.

அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசியலில் ஏழை மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய கூப்பன் புத்தக நிவாரணத்துக்கு பதிலாக ‘திவிநெகுமவுக்கு’ வழிகாட்டியாக திணைக்களம் ஒன்றையும் உருவாக்கியவர் இவர் .

நிவாரணம் மூலம் வாழும் மனிதர்களை விட சுயதொழில் மூலம் உயரும் குடிமகனை உருவாக்குவதே பசிலின் நோக்கமாகும்.

அதன் காரணமாக திவிநெகுமயின் கீழ் நடமாடும் விற்பனை வண்டிகள், சுயதொழில் உற்பத்திகள். உற்பத்திப் பொருளுக்கான பொருளாதார மத்திய நிலையங்கள், பொது வர்த்தக தொகுதிகளை நாடு பூராவும் ஏற்படுத்தினார். அவர் கிராமிய பொருளாதாரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.அவரின் வருகையின் முதல் இலக்கு 14 இலட்சம் குடும்பங்களின் பாதிப்படைந்த திவிநெகுமவை மீண்டும் உயிர்ப்பிக்க ஜனாதிபதிக்கு உதவுவதாகும்.

அனைவரின் உதவியுடன் அரசை கட்டியெழுப்பிய மனிதர் அவர். அதற்கு முன் னின்றவரும் அவரே. சகோதரர்களை இந்நாட்டின் உண்மையான அரசியல் வீரர்களாக்கியதும் அவரே. அவருக்கு யாருடனும் போட்டி இல்லை. போட்டி குடிமக்களை செயல் திறன் மிக்க நபர்கள் ஆக்குவதாகும். அதற்காக அறிமுகம் செய்துள்ள திவிநெகும வங்கி முறை மிகவும் வெற்றிகரமானது. திவிநெகுமயாளர்களின் அடிப்படை வங்கி( Divinaguma Community Bank) மற்றும் திவிநெகுமயாளர்களின் அடிப்படை வங்கி இணைப்பு( Divinaguma Community Based Banking Union) நுண்நிதி(M icro Finance) வங்கி முறைகளுக்கு அப்பால் சென்று நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் வங்கி முறையாகும். அதற்கான சட்ட வரைவு No.01-2013 என்னும் திவிநெகும சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பசில் ரோஹன ராஜபக்‌ஷவின் பொருளாதார முறையின் பிரதானம் மற்றும் இரகசியம் தங்கியிருப்பது’மீளாய்வு’ மூலமாகும். அவர் தரவு பெட்டகம் போன்றவர். எந்நேரமும் தரவுகளை சேகரிப்பவர் ஆவார்.

2013ஆம் ஆண்டில் திவிநெகுமவை தான்தோன்றித்தனமாக ஆரம்பிக்கவில்லை. ஏழ்மையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த ஐந்து அரச நிறுவனங்களை ஒன்றிணைத்ததன் மூலமாகும்..

01. சமுர்த்தி அதிகார சபை 1995
02. தெற்கு அபிவிருத்தி அதிகார சபை.-1996
03.உடரட்ட அபிவிருத்தி அதிகார சபை-2005
04. உடரட்ட கிராம புனர்வாழ்வு திணைக்களம்
05. சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களம்.

என்பன புதிய திணைக்களத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்ததன.

இலங்கையின் 25 மாவட்டங்களில் 331 பிரதேச செயலாளர் காரியாலய பிரிவுகள் 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு திவிநெகும திட்டமிடப்பட்டிருந்தது. நாடு முழுவதும் 6 வலயங்களாக பிரிக்கப்பட்டன.

வலயம் 01: - கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி
வலயம் 02: -கம்பஹா, குருநாகல், கேகாலை, புத்தளம்
வலயம் 03-: கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை
வலயம் 04-: அம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தறை
வலயம் 05-: அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு
வலயம் 06-: யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு.

இவை பசிலின் திட்டங்களாகும். இத்திட்டங்கள் வெற்றி பெறுவதை பொறுக்க முடியாத சிலர் பசிலுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகள் மற்றும் பூசிய சேறு காரணமாக தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட மனிதர்களைக் கூட தடுமாறச் செய்தது.

வடக்கிற்கு ‘ வடக்கு வசந்தம்’ கிழக்கிற்கு’ கிழக்கின் உதயம்’ என்பவற்றை கொண்டுவந்தது யுத்தத்திற்குப் பின்னர் பாரிய வேலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காகும். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் வடக்கு கிழக்கிற்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாமற் போனது.

பசிலின் வருகை
கொவிட் 19 தொற்றால் முழு உலகமுமே பாதிப்படைந்துள்ளது. வர்த்தக, கைத்தொழில், சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. அதனால் பசிலின் வருகை அரசாங்கத்துக்கு பலமாகும். ஏனென்றால் இந்த அரசாங்கத்தின் பிரதான அரசியல் கட்சியின் நிறுவுனர் அவர் ஆவார். ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் ஒப்பந்தம் செய்துள்ளவரும் அவரே ஆவார். அவரின் வருகை இவ்வனைத்து கட்சிகளின் ஆசீர்வாதத்தினுடனேயே நடைபெறுகிறது.

பசிலுக்கு பாராளுமன்றம் புதிய இடமா? இல்லை புரிந்துணர்வில்லாமல் அரசாங்க கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்கள் நிலவும் வேளையில் இவரின் வருகை மூலம் அதற்கும் பதில் கிடைக்கும்.

பசிலின் இந்த வருகை காரணமாக எதிர்க்கட்சியினருக்கு எவ்வளவு அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் நடத்தைகளாலும் கூற்றுகளாலும் தெரிகிறது. அதனால் அவருக்கு எதிராக உருவாக்கும் அலை அவர்களையே திரும்பி வந்து தாக்கும் என்பதை உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனால் ஒரு கவலை உண்டு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் யுத்தத்தின்போது தளபதியாக இருந்தவர் கோட்டாபய ராஜபக்‌ஷ. அவரின் அபிவிருத்திப் போருக்கு தளபதியாக இருந்தவர் பசில் ராஜபக்‌ஷ. அன்று வடக்கு கிழக்கில் யுத்தத்துக்கு தலைமை வகித்து கோட்டாபய ராஜபக்‌ஷ வழி நடத்தும் வேளையில் தெற்கில் யுத்தத்துடன் அபிவிருத்தியையும் தோளில் தாங்கியவர் பசில் ஆவார்.அன்று யுத்தத்தின் வெற்றிக்காக குரல் கொடுத்தவர்களுக்கு அவரின் அர்ப்பணிப்பை புரிந்து கொள்ளமுடியவில்லை. இன்றும் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்னும் பாரிய விருட்சத்தினை உருவாக்கியவருக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள் .

இவையெல்லாம் ஒளிபரப்பாவது இலங்கைக்கு கிருமி நாசினிகளை கொண்டு வரும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் ஊடகங்கங்களால் ஆகும். அவர்களின் குரல்களோடு இரசாயன உரங்களை கேட்கும் விவசாயிகளின் குரல்களை பிரசாரம் செய்யும் அளவிற்கு அவர்கள் நடத்தை உள்ளது.

அதனால் அரசாங்கம் தற்போது இரண்டாவது தடவையாக எழுச்சி பெற்றுள்ளது. இது கொரோனா தொற்று காரணமாக தூரமாகிப்போன 69 இலட்சம் பேரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் காலமாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்‌ஷவின் வருகை ஜனாதிபதிக்கு, பிரதமருக்கு, அரசுக்கு போன்று பொது மக்களுக்கும் பெரும் பலமாகும்.

பொதுமக்களுக்கு பசிலைப் பற்றிய கருத்து அல்ல உதவியே தேவையாகும். தற்போதைய தேவை திவிநெகும ஆகும் . தற்போதைய தேவை வடக்கின் வசந்தம்,கிழக்கின் உதயம் என்பனவாகும்.

தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள நாட்டை கட்டி எழுப்ப ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தேவையான இன்னுமொரு சக்தி வாய்ந்த தலைவர்.

அதனால் பசிலோடு விரோதம் பாராட்ட நினைக்கும் அரசியல்வாதிகள் இருந்தால் அதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தற்போது பாதிப்படைந்த மக்களுக்காகவே வேலை செய்ய வேண்டும். பசில் இந்திரஜாலம் புரிபவர் அல்ல என்றாலும் அவர் செயல் வீரர் என்பதை இந்நாட்டிற்கு புதிதாக கூறத்தேவையில்லை .


Add new comment

Or log in with...