குருணாகலில் மேலும் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்

குருணாகலில் மேலும் இரு பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்-Niraviya-Nikadalupotha Grama Niladhari Divisions in Kurunegala Isolated

- நள்ளிரவு முதல் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல்

குருணாகல் மாவட்டத்தின் ஒரு சில பிரதேசங்களில் கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்து வரும் நிலையில் அங்கு மேலும் இரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, குருணாகல் மாவட்டத்திலுள்ள பின்வரும் கிராம அலுவலர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
- கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில்: நிராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
- வெல்லவ பொலிஸ் பிரிவில்: நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

இதேவேளை, கொவிட்-19 தொற்று பரவல் நிலை அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் குளியாபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, குருணாகல்‌ மாவட்டம்‌ கனேவத்த பிரதேச செயலகப்‌ பிரிவிலுள்ள‌ கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தவெல்கல கிராம அலுவலர்‌ பிரிவு (GN 442) தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...