புனரமைக்கப்பட்ட 'உப்புவயல் குளம்' மக்களின் பாவனைக்கு

புனரமைக்கப்பட்ட 'உப்புவயல் குளம்' மக்களின் பாவனைக்கு-Commander of the Army Inaugurates ‘Uppuvayal Kulam’ Tank in Vaddukoddai

இலங்கை படையினரின் சிரமதான பணியுடன் புனரமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள “உப்புவயல் குளம்” நேற்று (17) பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில்  மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இற்றைக்கு பல வருடங்களிற்கு முன்னர் வடக்கு பிரதேசத்தில் விவசாய தேவைகளிற்காக இக் குளமானது பாவனை செய்யப்பட்டது. ஆனாலும் வருடம் முழுவதும் விவசாயத்தினை மேற்க்கொள்வதற்கான முழு தேவையான நீரினை சேமிக்க முடியாத காரணத்தினால்  சில காலங்களாக முழு குளமும் நீரற்று வறண்டு காணப்படலாயிற்று. பின்னர் பிரதேச மக்களினின் வேண்டுதலுக்கமைய  விவசாய திணைக்களத்தினர் மற்றும் அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டு 10வது இலங்கை இராணுவ  பொறியியல் படையணியினரின் இயந்திரங்கள் மற்றும் 11வது காலாட்படையினரின் சிரமதான பணியுடன் குளத்தின் புனரமைப்பு பணிகள் இனிதே நிறைவேறியது. இதற்கான நிதிபங்களிப்பானது 'தியாகி அறக்கட்டளை நிதியம்' தனியார் நிறுவனத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரனால் வழங்கப்பட்டது.

காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு சுகாதார விதிமுறைகளுடன் நடைபெற்ற இந் நிகழ்விற்கு யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி,இந்திய துணைத் தூதுவர்இயாழ் மாவட்ட செயலாளர்;, வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், 51,52,மற்றும் 55வது படைப் பிரிவின் தளபதிகள்,(வடக்கு) முன்னகர்த்தும் படைகளின் தளபதி, யாழ்  பாதுகாப்பு படைகளின் பிரிகேடியர் நிலை பொறுப்பதிகாரி, இராணுவ உயரதிகாரிகள், அரச அதிகாரிகள்,இராணுவ வீரர்கள் மற்றும் பிரதேச மக்கள்; கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பிரதேசத்திலுள் வாழுகின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்வடைய செய்யும் முகமாக இராணுவ வீரர்களினால் இன்னும் ஒரு தடம் பதிக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை தென்மேற்கு  கமக்காரர் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரம் மோகனின் வேண்டுகொளிற்கு இணங்க யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே. மகேஷன், வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் திருமதி பிறேமினி பொன்னம்பலம் மற்றும் விவசாய அபிவிருத்தி அமைப்பின் பிரதி பணிப்பாளர் ஈ நிஷாந்தனின் ஒருங்கிணைப்புடன் யாழ்  பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் 51வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் மற்றும் 513வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் பாரிஸின் முழு கண்காணிப்பின் கீழ் இக்குளம் புனரமைக்கப்பட்டது.


Add new comment

Or log in with...