ரிஷாட் பதியுதீனிடம் வவுனியாவில் 5 மணி நேரம் விசாரணை

ரிஷாட் பதியுதீனிடம் வவுனியாவில் 5 மணி நேரம் விசாரணை-, General Election, Parliamentary Election, Parliamentary Election 2020, Election Commission

பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்த ஆதரவாளர்கள்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்னிடம் வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் 5 மணிநேரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவரை இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கடந்தவாரம் அழைப்பாணை விடுத்திருந்தது.

ரிஷாட் பதியுதீனிடம் வவுனியாவில் 5 மணி நேரம் விசாரணை-, General Election, Parliamentary Election, Parliamentary Election 2020, Election Commission

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய இன்றயதினம் காலை 10 மணிக்கு அங்கு முன்னிலையான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிற்பகல் 3 மணி வரையிலான 5 மணி நேரம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

ரிஷாட் பதியுதீனிடம் வவுனியாவில் 5 மணி நேரம் விசாரணை-, General Election, Parliamentary Election, Parliamentary Election 2020, Election Commission

இதன்போது அவரது ஆதரவாளர்கள் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தின் முன்பாக குவிந்திருந்தமையையும், முன்னாள் அமைச்சர் விசாரணை முடிந்து வந்த பின் அவரை வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீனிடம் வவுனியாவில் 5 மணி நேரம் விசாரணை-, General Election, Parliamentary Election, Parliamentary Election 2020, Election Commission

இதன்பின் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தனக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஏற்கனவே விசாரணைகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது 15 மாதங்கள் கழித்து தேர்தல் நேரத்தில் அரசாங்கம் தன்னை திட்டமிட்டு பழிவாக்குவதாக குற்றம் சாட்டினார்.

ரிஷாட் பதியுதீனிடம் வவுனியாவில் 5 மணி நேரம் விசாரணை-, General Election, Parliamentary Election, Parliamentary Election 2020, Election Commission

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தருபன், வவுனியா நிருபர் - பாலநாதன் சதீஷ்)

Add new comment

Or log in with...