இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி மதிப்பு போதைப்பொருள்

- போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

இராமநாதபுரம் அருகே திருவாடானை  பகுதியில் உள்ள பாக் ஜலசந்தி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு,  நாட்டுப் படகில் கடத்த இருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான  போதைப்பொருள் 
நேற்று முன்தினம் இரவு (21) மீட்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த இருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தேவிபட்டிணம், திருவாடானை ஆகிய வடக்கு கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில்   சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு  வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு திருவாடணை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் அந்த வழியாக வந்த முச்சக்கர வண்டி ஒன்றை சிறப்பு குற்றப்பிரிவு பொலிஸார் நிறுத்தி விசாரனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி  முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்ததால் குறித்த முச்சக்கர வண்டியை சோதனை செய்தனர்.

முச்சக்கர வண்டியில் மறைத்து வைத்திருந்த  போதைப்பொருளான  மெத்தோக்குலான், ஆம்ப்பிட்டமெயின் பெத்தா மெட்டயின், செம் மரக்கட்டைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் எடை பார்க்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள்   முச்சக்கர வண்டியில் மறைத்து வைத்திருந்தமை தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து  போதைப்பொருளை கடத்துவதற்கு மூளையாக செயற்பட்ட சர்வதேச கடத்தல் கும்பல் குறித்த  முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத குறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வருண குமார் கூறுகையில் ,

பாக்ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் அதிகளவில் கடத்தப்பட்டு   வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் துறை   சார்பாக சிறப்பு படை  அமைத்து கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகளை தேடி வந்தோம்.

இந்நிலையில் சிறப்பு குற்றப்பிரிவு காவலர்களால் போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் சிலர் சிக்கியுள்ளனர்.
விரைவில் கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படுவார் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று   வருவதாக கூறினார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் சர்வதேச மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் இருக்காலாம்  என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மன்னார் குறூப் நிருபர் – லம்பேர்ட் றொசேரியன்)


Add new comment

Or log in with...