அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்

அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்-Seek Hospital Care When Pregnant Women Found Danger Signs

பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிகுறிகளாவன:
காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits), நெஞ்சு/வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல், உடல் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம்.

தரமான சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...