மும்பாயில் சிக்கியிருந்த 163 பேர் இலங்கை வந்தடைந்தனர்

மும்பாயில் சிக்கியிருந்த 163 பேர் இலங்கை வந்தடைந்தனர்-Sri Lankan Stranded in Mumbai Returned

இந்தியாவின் மும்பாய் நகரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 163 பேரை அழைத்துக் கொண்டு  விசேட விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

UL 144 எனும் இலக்கம் கொண்ட விமானத்தின் மூலம் இன்று (25) பிற்பகல் 2.35 மணிக்கு குறித்த மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாடு திரும்ப முடியாமல் இருந்த குறித்த மாணவர்களுடன், வியாபாரிகளைக் கொண்ட குழுவினரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

 

 

இவ்வாறு வருகை தந்த குழுவினர் விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர்களை தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாது பாகிஸ்தான், நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் இவ்வாறு ஏற்கனவே இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது. 
 


Add new comment

Or log in with...