மேலும் இருவர் அடையாளம்; இது வரை 150 பேர் அடையாளம்

மேலும் இருவர் அடையாளம்; இது வரை 150 பேர் அடையாளம்-2 More COVID19 Patients Identified-Total Up to 150

மரணித்த மருதானையைச் சேர்ந்தவரின் மருமகன், பேரன்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (01) மரணமடைந்த மருதானையைச் சேர்ந்த 73 வயதான நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (02) பிற்பகல் 1.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 148 இலிருந்து 150 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 02 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 150 பேரில் தற்போது 126 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 03 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 251 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 150
குணமடைவு - 21

சிகிச்சையில் - 126
மரணம் - 03

மரணமடைந்தவர்கள் (06)
இலங்கையில் - 03
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 21
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 150
ஏப்ரல் 02 - 02 பேர் (150)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...