மேலும் 10 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 142

மேலும் 10 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 142-10 More COVID19 Patients Identified-Total Increased to 142

- இன்றையதினம் 20 பேர் அடையாளம்
- இது வரை அதிகளவானோர் இன்று அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள், புத்தளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இந்தோனேஷியா சுற்றுலா சென்று வந்தவருடன் தொடர்புடையவர்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (31) மாலை 7.20 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 132 இலிருந்து 142 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (31) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இது வரை இன்றையதினமே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 142 பேரில் தற்போது 123 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 173 பேர் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 142
குணமடைவு - 17

சிகிச்சையில் - 123
மரணம் - 02

மரணமடைந்தவர்கள் (05)
இலங்கையில் - 02
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 03
லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 17
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 142
மார்ச் 31 - 20 பேர் (142)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...