ஊரடங்கு நீக்கப்டும்போது வங்கிகளை திறக்கவும்

ஊரடங்கு நீக்கப்டும்போது வங்கிகளை திறக்கவும்-Opening Bank During Curfew Lifted

இன்று (23) காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதற்காக கிளை முகாமையாளர்கள் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை பணியில் அமர்த்த வேண்டும். இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Add new comment

Or log in with...