மேலும் 7 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 59

மேலும் 7 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 59-7 More Coronavirus Patients Identified-Totoal Up to 59

கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்து இருவர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில்,
41 - 50 வயதுக்குட்பட்டவர்கள் 45.2%
31 - 40 வயதுக்குட்பட்டவர்கள் 16%

பெண்கள் - 19%
ஆண்கள் - 81%

இலங்கையர்கள் - 94-95%
ஏனையோர் வெளிநாட்டவர்கள்

அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நாளை (20) முதல், கொழும்பு கிழக்கு முல்லேரியா வைத்தியசாலையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதிதாக இன்று (19) திறக்கப்ட்ட வெலிகந்த கொரோனா வைத்தியசாலையும் இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 212 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

எனவே நேற்றையதினம் (18) 50 ஆக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை இன்றையதினம் (19) இது வரை அறிவிக்கப்பட்ட 2 பேருடன் தற்போது 52 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஜனவரி 27ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட சீன பெண் உள்ளடங்கலாக இதுவரை 53 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 11 - ஒருவர்
மார்ச் 12 - ஒருவர்
மார்ச் 13 - 03 பேர்
மார்ச் 14 - 05 பேர்
மார்ச் 15 - 08 பேர்
மார்ச் 16 - 10 பேர்
மார்ச் 17 - 13 பேர்
மார்ச் 18 - 11 பேர்
மார்ச் 19 - 07 பேர்

19.03.2020 (06 பேர்)
60. விபரம் அறிவிக்கப்படவில்லை
59. விபரம் அறிவிக்கப்படவில்லை
58. விபரம் அறிவிக்கப்படவில்லை
57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்
54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி

18.03.2020 (11 பேர்)
53. விபரம் அறிவிக்கப்படவில்லை
52. விபரம் அறிவிக்கப்படவில்லை
51. விபரம் அறிவிக்கப்படவில்லை
50. விபரம் அறிவிக்கப்படவில்லை
49. விபரம் அறிவிக்கப்படவில்லை
48. விபரம் அறிவிக்கப்படவில்லை
47. விபரம் அறிவிக்கப்படவில்லை
46. விபரம் அறிவிக்கப்படவில்லை
45. விபரம் அறிவிக்கப்படவில்லை
44. விபரம் அறிவிக்கப்படவில்லை
43. விபரம் அறிவிக்கப்படவில்லை

17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை
41. விபரம் அறிவிக்கப்படவில்லை
40. விபரம் அறிவிக்கப்படவில்லை
39. விபரம் அறிவிக்கப்படவில்லை
38. விபரம் அறிவிக்கப்படவில்லை
37. விபரம் அறிவிக்கப்படவில்லை
36. விபரம் அறிவிக்கப்படவில்லை
35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
33. களனியைச் சேர்ந்தவர்
32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
22. 37 வயது ஆண்
21. 50 வயது ஆண்
20. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்

27.01.2020
1. அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்


Add new comment

Or log in with...