STF கட்டளையிடும் அதிகாரியாக MWG லயனல் குணதிலக

STF கட்டளையிடும் அதிகாரியாக MWG லயனல் குணதிலக-DIG Lionel Gunathilake Appointed as Commandant of the STF
எம்.டப்ளியூ.ஜீ. லயனல் குணதிலக (இ), எம்.ஆர். லத்தீப்

நேற்று முதல் அமுலாகும் வகையில் நியமனம்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) முன்னாள் கட்டளையிடும் அதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர். லத்தீபின் இடத்திற்கு, 12 ஆவது கட்டளையிடும் அதிகாரியாக எம்.டப்ளியூ.ஜீ. லயனல் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (09) முதல் அமுலாகும் வகையில், விசேட அதிரடிப்படையின் பிரதி கட்டளைத் தளபதியாகவும், பிரஜா பொலிஸ் பிரிவின் பதில் பொலிஸ் மாஅதிபராகவும் கடமையாற்றி வரும் லயனல் குணதிலகவுக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியாக இருந்து, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர். லத்தீப் கடந்த வாரம் (04) பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு எம்.டப்ளியூ.ஜீ. லயனல் குணதிலகவை நியமிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை (06) அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த அனுமதி தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...