STF கட்டளையிடும் அதிகாரியாக எம்.ஆர். லத்தீப்

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரியாக எம்.ஆர். லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பொலிஸ் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசின் அடிப்படையில், இன்றைய தினம் (18) பொலிஸ் மாஅதிபரினால் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எம்.ஆர். லத்தீப், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 04 ஆம் திகதியிலிருந்து குறித்த நியமனம் வழங்கப்படவிருந்த போதிலும், பொலிஸ் மாஅதிபரினால் குறித்த நியமனம் வழங்கப்படாதிருந்த நிலையில், இன்றைய தினம் (18) அவர் அதற்கான நியமனக் கடிதத்தில் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில், பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய அனுமதியை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தாமை குறித்து பொலிஸ் மாஅதிபரிடம் விளக்கம் கோரவுள்ளதாக சுதந்திர பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் (18) இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக தேசிய சுதந்திர பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.


Add new comment

Or log in with...