ஸஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக கைதான 62 பேருக்கு தொடர்ந்து வி.மறியல்

ஸஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக கைதான 62 பேருக்கு தொடர்ந்து வி.மறியல்-Weapon Training With Zahran Hashim 62 Suspects Re Remanded Til Jan 14

இருவருக்கு பிணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌபீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரில் 62 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஸஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று (31) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவினை பிறப்பித்தார்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)


Add new comment

Or log in with...