2016 O/L: யாழ். இந்து மாணவன் அபிநந்தன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

இந்துக் கல்லூரி அதிபருடன் ஏ. அபிநந்தன் (படங்கள்: புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
அதன் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை கொழும்பு ஐந்து, விசாகா மகளிர் கல்லூரி மாணவி, அனுத்கி சமத்கா பஸ்குவல் பெற்றுள்ளார்.
 
இதேவேளை, அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் மிகச் சிறந்த பெறுபேறை பெற்ற யாழ்ப்பாண ஹிந்து கல்லூரி மாணவன் ஏ. அபிநந்தன், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.   
 
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில்,  அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.
 
 
இடம் பெயர் பாடசாலை
1 அனுகி சமத்கா பஸ்குவல்  விசாகா பாலிகா வித்தியாலயம், கொழும்பு 05
2 எஸ்.எம். முணசிங்க மஹாமாயா பாலிகா வித்தியாலயம், கண்டி
3 ஆர்.எம். சுகத் ரவீந்திர  சன்வர ஆனந்தா கல்லூரி, கொழும்பு 10
3 திமுத் ஓசதி மிரிஸ்ஸகே ராஹுல வித்தியாலயம், மாத்தறை
4 எச்.பி. பபசரா மலிதி குமாரி ஹேரத் ரத்னாவலி பாலிகா மகா வித்தியாலயம், கம்பஹா
5 டி.எம். ரனும் திசரதி நாணயக்கார தேவி பாலிகா மகா வித்தியாலயம், கொழும்பு 08
5 ஏ. தம்சரா மேதாவி சங்கமித்தா பாலிகா மகா வித்தியாலயம், காலி
5 ஏ. அபிநந்தன் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம்
6 கே.ஜீ.ஜீ.ஈ. ரன்தினி டி சில்வா சவுத்லண்ட் வித்தியாலயம், காலி
6 ஈ.ஏ. யசாரா உமாஷி சுஜாதா வித்தியாலயம், மாத்தறை
(படங்கள்: புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
 
 

Add new comment

Or log in with...