ஜாலியவின் பிணை நிராகரிப்பு; பெப் 09 வரை விளக்கமறியல்

 
அரச நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் கைதான அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிர்வரும் பெப்ரவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (27) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இதன்போது, அவரது வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த நீதவான் அதனைன நிராகரித்ததோடு, அவரது விளக்கமறியலை நீடிப்பதற்கான உத்தரவையும் வழங்கினார்.
 
(Subashini Senanayake)

Add new comment

Or log in with...