சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியீடு

- பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 6,000 இலிருந்து ரூ. 15,000
- அனுமதிக் கட்டணம் ரூ. 1,500 இலிருந்து ரூ. 25,000
- விரிவுரை கட்டணம் ரூ. 3,900 இலிருந்து ரூ. 25,000

பொது நுழைவுத் பரீட்சைக் கட்டணம் உள்ளிட்ட சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டக் கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் ரூ. 6,000 இலிருந்து ரூ. 15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொது நுழைவு பரீட்சையின் மூலம்  இணையும் முதலாம் வருட மாணவர்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ. 1,500 இலிருந்து ரூ. 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல் வருடத்திற்கான மொத்த கட்டணம் ரூ. 17,400 இலிருந்து ரூ. 67,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் ஒரே வகையில் அறவிடப்பட்டு வந்த
வெளிநாட்டுடனான மாணவர் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டப் பட்டத்துடன் முதலாம் ஆண்டில் நுழையும் ஆரம்பநிலை மாணவர்களுக்கு அனுமதிக் கட்டணம் ரூ. 75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறித்த நுழைவுக் கட்டணத்துடன் மொத்தமாக ரூ.117,500 செலுத்த வேண்டும்.

இரண்டாம் வருட மாணவர்களுக்கு அனுமதிக் கட்டணம் ரூ. 25,000 உடன், அவ்வருடத்திற்கு  ரூ. 40,500 ரூபாவும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு ரூ. அனுமதிக் கட்டணம் ரூ. 35,000 உடன் அவ்வருடத்திற்கு  ரூ. 50,500 மொத்தக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் அல்லது கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் LLB பட்டத்துடனான மூன்றாம் வருட மாணவர்களின் அனுமதிக் கட்டணம் ரூ. 25,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய கட்டணங்கள் மற்றும் இதற்கு முன்னரான பழை கட்டணங்கள் அடங்கிய வர்த்தமானிகள் இணைப்பு...

PDF icon 2313-49_T.pdf (111.14 KB)
PDF icon 2208-13_T.pdf (127.41 KB)

PDF File: 

Add new comment

Or log in with...