நெருக்கடிக்கு தீர்வு காண ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா அறிவிப்பு

இலங்கை மக்கள் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்து நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கும், தேவையான சீர்திருத்த செயல்முறையுடன் நீடித்த தேசிய நல்லிணக்கப் பாதையில் இறங்குவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பியஆணைக்குழு தலைவர் உர்சுலா வொன் டர் லென் (Ursula Von Der Leyen)  தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதை முன்னிட்டு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியிலேயே ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டில் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான உரையாடல் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...