விரைவில் வெளிவரவிருக்கும் கல்விச்சுடர் மாதாந்த மின்னிதழ்

இலங்கையிலுள்ள முன்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களின் நலன் கருதி 'கல்விச்சுடர்' என்ற பெயரில் மாதாந்த மின்இதழ் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கின்றது. தமிழ், ஆங்கில மொழிகளிலான ஆக்கங்கள் இந்த சஞ்சிகையில் இடம்பெறவுள்ளன.

இலங்கையில் கல்வித் துறையில் காணப்படும் குறைபாடுகள், கல்வி விருத்திக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள், கல்விச் சீர்திருத்தங்கள், புதிய போக்குகள் பற்றிய தகவல்கள், மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள், அதிபர் ஆசிரியர்களுக்கான ஆலோசனைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கல்விசார் வழிகாட்டுதல்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் அவற்றின் கல்விப் போதனைகள், கல்வி மேம்பாட்டுக்கு அரச மற்றும் புலம்பெயர் சமூக நிறுவனங்கள் வழங்கி வரும் நிதியுதவிகளும் ஆதரவும், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட செய்திகள், தகவல் குறிப்புகள் போன்ற பல தகவல்களை உள்ளடக்கியதாக 'கல்விசுடர்' மின்னிதழ் வெளிவரவிருக்கிறது.

ஆக்கங்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இடம்பெறும். இது மின்னிதழ் என்பதால் சர்வதேச ரீதியில் குறிப்பாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அனைவரினதும் பார்வைக்கு இந்த சஞ்சிகையை கொண்டு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சஞ்சிகைகளுக்கு கல்விசார் அறிஞர்கள், புலமையாளர்கள், கல்வித் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையில் அனுபவமிக்கவர்கள், சமூகவியலாளர்கள் என்போரின் பேராதரவு கோரப்படுகின்றது.

கருத்துக்களை ஆக்கங்களாக வடிவமைத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சஞ்சிகைக்கு பங்களிப்பு செய்யலாம்.

ஆக்கங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் அமையலாம்.

கையெழுத்துப்பிரதி ஆக்கங்களில் A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மேற்படாமலும், கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட ஆக்கங்கள் A4 தாளில் இரு பக்கங்களுக்கு மேற்படாமலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தொடர்புகளுக்கு மேலுள்ள மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த முடியும்.

கல்விசுடர் ஆசிரியர் குழு

தகவல்: எச்.எச்.விக்ரமசிங்க


Add new comment

Or log in with...