மக்கள் கவுன்சில் யோசனைக்கு பதில் ஜனாதிபதி ரணில் வரவேற்பு

அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் தலைவர்கள் அரசாங்கத்திற்கு கையளித்துள்ள யோசனைகளில் மக்கள் கவுன்சில் ஒன்றை அமைப்பது என்பது சிறந்த யோசனையாக உள்ளதாகவும் அதனைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் மேற்கொண்ட விசேட பேச்சு வார்த்தையின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஊழல் மோசடி இடம் பெறுவது தொடர்பில் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அத்துடன் அந்த நடவடிக்கைகள் தொடர்பில் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்படும்.

பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஆற்றிய உரையின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என இருதரப்பு உள்ளதாகவும் அவர்களிடையே பாரிய வித்தியாசங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களின் செயற்பாடுகளுடன் தொடர்புபடாதவர்கள்.

அழிவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அவர்கள் எதிரானவர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் தொடர் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை செயற்பாடுகளை மேற்கொள்ளாதவர்கள் என்பது தமது நம்பிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...