2020 GCE O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2020 GCE O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின-2020 GCE OL Exam Results Released

2020 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் தற்போது (23) பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk

<< பெறுபேறுகளை பெற >>

G.C.E. (A/L) EXAMINATION

 
 
 

542 இணைப்பு நிலையங்கள் மூலம் 4,989 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைக்கு, மொத்தமாக 622,352 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்ததாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஒரு சில பாடங்களுக்கான பிரயோக பரீட்சைகள் இடம்பெறாத நிலையில் அவற்றின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் - 423,746 பேர்
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 198,606 பேர்
மொத்த பரீட்சார்த்திகள் - 622,352 பேர்

பெறுபேறுகளை தரவிறக்கம் செய்தல்
அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும், விண்ணப்பங்களை அனுப்பும்போது, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name), கடவுச்சொல் (Password) மூலம், உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இது தொடர்பான பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) மூலம் குறித்த மாகாண மற்றும் வலய பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து பெற்றுள் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறகள், எதிர்வரும் நாட்களில் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பெறுபேற்று சான்றிதழ்களை செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுபேறுகளின் மீளாய்வு
க.பொ.த. (சா/த) பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
0112784208/ 0112784537
0113188350/ 0113140314
1911

கையடக்க தொலைபேசிகளில் பெறுபேறுகளை பெற...
Exams ஒரு இடைவெளி சுட்டிலக்கம் டைப் செய்து உரிய வலையமைப்பின் அடிப்படையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Mobitel - 8884
Hutch - 8888

PDF File: