இலாஸ்டோவின் TEXSTRETCHக்கு இரட்டை விருதுகள்

இறப்பர் கைத்தொழில் துறையில் 74 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இலாஸ்டோ கூட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான டெக்ஸ்ரீப் தனியார் நிறுவனம் இம்முறையும் CNCI Achievers Awards 2020 விருது விழாவில் மகத்தான இரண்டு விருதுகளை வென்றுள்ளது. உற்பத்திப்பிரிவின் பாரியளவிலான பிரிவில், தேசிய மற்றும் மாகாண மட்டத்திலான விருதுகளை வென்றுள்ள டெக்ஸ்ரீப் நிறுவனம் 100 இற்கும் மேற்பட்ட, உலகின் முன்னணி விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வர்த்தக நாமங்களுக்கு தமது சேவைகளை வழங்கி 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்றது.

”எனது குழுவை நான் வலுவூட்டியுள்ளேன். அவர்கள் மிகவும் ஒற்றுமையாக பணியாற்றுகின்றார்கள். அவர்களின் முன்னேற்றத்தை அருகிலிருந்து அவதானித்து மேற்பார்வை செய்வதோடு அதன்மூலம் அவர்களது முயற்சியை மேலும் மெருகூட்ட வைக்க முடியுமென உறுதியாக நம்புகின்றேன். மேலும், எமது நிறுவனம் தற்பொழுது முதிர்ச்சியான கட்டத்தை அடைந்துள்ளதோடு கோவிட் 19 கொள்ளை நோய்க்கு நியாயமானதொரு தீர்வாக எமது உற்பத்தியான காத்திரமான உடற்பயிற்சி பட்டியை (Progressive Resistance Bands) பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் பணி ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என இலாஸ்டோ கூட்டு நிறுவனத்தின் அதிபரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான மங்கள குணசேகர தமக்கு கிடைத்த விருதுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார். நிறுவனத்தின் பிரதான உற்பத்தியான TEXSTRETCH Progressive Exercise Resistance Bands சமகாலத்தில் முக்கியத்துவமிக்க மனிதக் குலத்தின் நோய் எதிர்ப்புச் சக்திக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் வசதியானதும் வெற்றிகரமானதுமான பயன்மிக்க உற்பத்தியாக முழு உலகமே இன்று அடையாளப்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...