TNA - SLMC இணைவு; அரசியல் ரீதியாக விவேகமானதல்ல

சித்தார்த்தன் அதிரடி கருத்து

TNA - SLMC இரு கட்சிகளும் இணையப் போவதாகக் கூறுவது அரசியல் ரீதியாக விவேகமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தாலும் கூட, சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.

எனவே, இரு கட்சிகளும் இணையப்போவதாகக் கூறுவது அரசியல் ரீதியாக விவேகமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் தமிழரசுக் கட்சியில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பாக சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...