கிழக்கில் 7 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளம்

-  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் லதாகரன்

கிழக்கு மாகாணத்தில் 07பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக நேற்று  (14) முதல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ​ெடாக்டர் ஏ. லதாகரன் தெரிவித்தார். 

கல்முனை தெற்கு, காத்தான்குடி, அம்பாறை, கிண்ணியா, காரைதீவு, ஓட்டமாவடி, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஒரு வார காலத்திற்குள் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கடந்த 12மணித்தியாலத்திற்குள்  47 பேர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். 

சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிராந்தியங்களில் உள்ள மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை  கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார். 

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 1734ஆக அதிகரித்துள்ளதாகவும் 49ஆயிரத்து 97பேருக்கு பீ.சீ.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1010, அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 77, மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 413 , திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 234பேரும் அடங்கலாக 1734பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பீ.சீ.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 3834பேருக்கும் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 23056பேருக்கும் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 14091பேருக்கும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 8116பேருக்குமாக மொத்தம் கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரத்தி 97 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...