ஆறு பொருட்களின் விலையை அதிகரிக்க கூடாது

நாளை (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
ஒரு கிலோகிராம் மைசூர் பருப்பு ரூ. 190
உருளைக்கிழங்கு  ரூ. 145
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் ரூ. 155 
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி ரூ. 480
ஒரு கிலோகிராம் கோதுமை (பொதி) ரூ. 95 
ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாய் ரூ. 355
 
என அதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
 
இதேவேறை நாளைய தினம் (20) எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
 
இது புதிய அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...