“எதிர்காலத்தில் பாய்ச்சல்” என்ற தொனிப்பொருளில் OPPO INNO DAY வருடாந்த நிகழ்வை சீனாவின் ஷென்சானில் நடத்தப்போவதாக OPPO இன்று அறிவித்தது. இணைய அனுபவ தசாப்தத்தில் இந்த நிகழ்வானது OPPO இன் பிந்திய சிந்தனைகள் மற்றும் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவதாக அமையும்.
புதிய சகாப்தத்திற்கான தொழில்நுட்பப் பார்வை மற்றும் வணிக தத்துவம் மற்றும் வெளிக்கொணரப்படவுள்ள மூன்று கண்ணக்கருவிலான உற்பத்திகள் பற்றி OPPO மற்றும் Levin Liu நிறுவனரும், பிரதம நிறைவேற்று அதிகமாரியும், OPPO இன் பிரதித் தலைவரும், OPPO இன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான டோனி சென், OPPO இன் துணைத் தலைவரும் OPPO சிறப்புரை ஆற்றவுள்ளார்.
2019இல் ஆரம்பிக்கப்பட்ட OPPO INNO DAY எதிர்கால தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, முக்கிய தொழில்நுட்ப நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்ள நிறுவனத்துக்கு முக்கியமான நிகழ்வாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு OPPO அறிவார்ந்த இணைப்புப் பற்றிய யோசனையை முன்வைத்திருந்தது.. இந்த ஆண்டுக்கான தொனிப்பொருள் இணையத்தின் அனுபவமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. அறிவார்ந்த இணைப்பு என்பது ஒரு அடித்தளம் என்றும், இணைய அனுபவம், அதாவது எளிய இணைப்புகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை ஒன்றிணைப்பது எதிர்காலமாக இருக்கும் என OPPO நம்புகிறது.
அதேநேரம், பிளாஷ் சார்ஜிங், 5G, இமேஜிங் மற்றும் மென்பொருள் உகப்பாக்கம் போன்ற துறைகளில் பெற்றுள்ள புத்தாக்க சாதனைகள் உள்ளடங்கலாக 5G CPE, AR கண்ணாடிகள், ஸ்மார்ட் வொட்ச் உள்ளிட்ட கருவிகள் இச்சாதனைகளாக அமைந்துள்ளன. இதனைவிட புதுமையான தொழில்நுட்பங்கள் இந்த வருடம் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
OPPO INNO DAY 2020 பற்றிய கூடுதல் தகவல்களை events.oppo.com/en/innoday2020 என்ற இணைப்பின் மூலம் பார்வையிடலாம்.
Add new comment