ICC தலைவர் பதவியிலிருந்து என். ஶ்ரீநிவாசன் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் சபை தலைமைத்துவ பதவியிலிருந்து என். ஶ்ரீநிவாசன் நீக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தலைவர் சஷாங்க் மனோகர் அப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.
 
இன்று (09) இடம்பெற்ற BCCI வருடாந்த பொதுக் கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதே வேளை, சில முரண்பாடுகள் காரணமாக, IPL நிர்வாக குழுவிலிருந்து ரவி சாஸ்த்திரி நீக்குவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவியிலுள்ள ரவி சாஸ்த்திரி, எதிர்வரும் 2016, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ICC இன் உலக ரி20 தொடர்வரை, அவர் அப்பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்போதைய BCCI தலைவராக இருந்தபோது, 2013 இல் இடம்பெற்ற ஆறாவது IPL போட்டியில் இடம்பெற்ற பல சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த ஶ்ரீநிவாசன் பதவி விலகியிருந்தார்.
 
அதன் பின் இடம்பெற்ற BCCI தலைவர் தேர்தலில் ஜக்மோகன் டால்மியா வெற்றி பெற்றார். ஆயினும் கடந்த ஒக்டோபர் மாதம் டால்மியா மரணமுற்றதை அடுத்து, தற்போது ICC தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சஷாங் மனோகர் தெரிவு அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
BCCI தலைவராக இல்லாத நிலையில், எவ்வாறு ICC தலைவராக நியமிப்பது என்ற கேள்வி, இன்றைய கூட்டத்தில் எழுப்பப்பட்டதை அடுத்தே ஶ்ரீநிவாசனை பதவி நீக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே இரு வருடங்களுக்கு ICC தலைவராக பொறுப்பேற்ற ஶ்ரீநிவாசனின் இடத்தை பூர்த்தி செய்யும் வகையில் எதிர்வரும் 2016 ஜூன் வரை மனோகர் இப்பதவியை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...