12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke

12 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் Evoke-Country's Foremost Entertainment Brands, Evoke Celebrates 12 Yrs
Evoke குழு

நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தகநாமங்களில் ஒன்றான Evoke International (Pvt) Ltd  தனது 12 ஆண்டு பூர்த்தியை அண்மையில் கொண்டாடியது. இலங்கையை தளமாகக் கொண்ட மிகப் பாரிய பெறுமதி சேர் சேவை வழங்குநராக Evoke திகழ்வதுடன், 360 பாகை  உள்ளக-மேம்பாட்டுக் குழுவுடன், புத்தாக்க, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் வாடிக்கையாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதை பிரதான நோக்கமாகக் கொண்ட தயாரிப்புகளை வழங்குகிறது. அவர்களது சேவைகளில் மொபைல் செயலி மற்றும் இணையத்தள உருவாக்கம், content ஒருங்கிணைப்பு, content தயாரிப்பு, WAP தயாரிப்புகள், IVR மற்றும் Voice சேவைகள் மற்றும் டிஜிட்டல் ஊடகம் ஆகியனவும் அடங்குகின்றன.

வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற பிரதான பொழுதுபோக்கு அலைவரிசைகளிலிருந்து டிஜிட்டலை நோக்கி விரைவாக மாறுவதனை பயன்படுத்தி 2008 ஆம் ஆண்டில் Evoke ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் ஏனைய போட்டியாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதென்பதுடன்,  தற்போது வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்கான உகந்த திருப்தி மற்றும் பெறுமதியை வழங்க தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான தீர்வுகளை உருவாக்கும் டிஜிட்டல் சேவை வழங்குநராக தன்னை ஸ்தாபித்துள்ளது.

இடமிருந்து வலமாக - ரஜிவ் குணவர்தன (இயக்குநர்), ரஜித பஸ்நாயக்க (தலைவர்) மற்றும் லஹிரு விக்ரமசிங்க (பிரதான நிறைவேற்று அதிகாரி / பணிப்பாளர்)

SLT Filmhall, Evoke Video Unlimited, Airtel Movie Box, Airtel Music Box, Vindana Application, Vindana TV, Reverse Bid முதற்தர உள்நாட்டு இசை செனலான  Evoke ஆரளiஉ ஆகியவை உள்ளடங்கலாக பல குறிப்பிடத்தக்க தயாரிப்புகளை Evoke  கடந்த காலங்களில் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது தொலைத்தொடர்பு வர்த்தகநாமங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் Hungama, iTunes, Spotify, AWS போன்ற உலகளாவிய பங்காளர்களின் ஊடாக மக்களுக்கு பொழுதுபோக்கு சேவையை Evoke வழங்குகின்றது.

1000+ திரைப்படங்கள், பல்வேறு பாணியிலான இசை மற்றும் குரல் தயாரிப்புகள், தரவு, WAP மற்றும் செயலிகளுக்கான பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய எப்போதும் விரிவடைந்துவரும் Evoke இன் உள்ளடக்கங்களின் வரிசையானது, சுயாதீன கலைஞர்கள் முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரை மற்றும் இடையில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய அதன் விரிவான வாடிக்கையாளர்களால் மிகவும் தேடப்படுபவையாக உள்ளன.

நிறுவனத்தின் வெற்றி குறித்து Evoke இன் தலைவர் ரஜித பஸ்நாயக்க கருத்து தெரிவிக்கையில், "வளர்ச்சி மற்றும் நிலைமாற்றத்துடனான இன்னொரு வருடத்தை நிறைவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த வருடங்களாக, உள்நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ள மொபைல் பயன்பாட்டுடன்,  'பொழுதுபோக்கு” எவ்வாறு நுகரப்படுகிறது மற்றும் பகிரப்படுகின்றது என்பது தொடர்பில் Evoke குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.  இலங்கை மற்றும் பிராந்தியமெங்கும் ஸ்மார்ட்போன் எங்கும் பரவியுள்ளதால், தொடர்பாடல், டிஜிட்டல் பொழுதுபோக்கு, தகவல்  மற்றும் வர்த்தகம்  ஆகியவற்றில் நுகர்வோர் ஈடுபாட்டைத் தூண்டுகிறது.

"எங்கள் டிஜிட்டல் மூலோபாயமானது எங்கள் வணிக பங்களார்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடுமிக்க உள்ளடக்கம் மற்றும் பிரத்தியேக வாய்ப்புகளை வழங்கும் இளைஞர்களுடனான எங்கள் தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது தொடர்பில், இந்தியாவை தளமாகக் கொண்ட Hungama Digital Media Entertainment Pvt Ltd போன்ற பாரிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள பங்குடமைகளை நாம் உருவாக்கியுள்ளோம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

12 ஆவது ஆண்டு நிறைவு விழாவை எளிமையான நிகழ்வாகக் கொண்டாடும் வைபவத்தில் உரையாற்றிய. பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லஹிரு விக்ரமசிங்க, “கடந்த ஆண்டுகளாக நாம் அடைந்துள்ள அனைத்தும் எமது அணியின் கூட்டு முயற்சியெனக் கூற முடியும், ஏனெனில் அது இல்லாமல் இத்தகைய நிலை மாறும் தொழிற்துறையில், பல சந்தர்ப்பங்களில் முதலாள் நன்மையுடன் நீடிப்பது சாத்தியமாகியிருக்காது," என்றார்.

இந்நிலையில், பணிப்பாளர் ரஜிவ் குணவர்தன, Evoke இன் வெற்றிக்கான காரணம் பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான லஹிரு விக்ரமசிங்கவின் தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவமே என குறிப்பிட்டதுடன், Evoke தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்கியது நிறுவனத்தினுள் உள்ள திறமையானவர்களே எனவும் தெரிவித்தார்.

"விரிவாக்கத்திற்காக நாங்கள் நிதி ரீதியாக நன்கு தயாராக உள்ளோம், இதனை  தக்கவைத்துக் கொள்ள நாம் புத்தாக்கமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம், ஏனென்றால் நாங்கள் இருக்கும் தொழிற்துறை தொடர்ச்சியான மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது. எதிர்வரும் வருடங்களில் புதிய திட்டங்கள், புதிய வழிகள் மற்றும் புதிய சந்தைகளில் காலடி எடுத்து வைக்க  உள்ளோம்" என்று அவர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...