புதுடில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் 16ஆம் திகதி 3ஆவது முறையாகப் பதவியேற்பு

அரவிந்த் கெஜ்ரிவால் வருகிற 16ஆம் திகதி புதுடில்லியின் முதல்வராக 3ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளார். இந்தப் புதிய அரசில் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பதவியேற்கவுள்ளனர்.

புதுடில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் புதுடில்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக எதிர்வரும் 16ஆம் திகதி பதவியேற்க உள்ளார். ராம் லீலா மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக 8 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...