சுதந்திர தினத்தில் MCC ஒப்பந்தத்தை கிழித்தெறிய எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு

அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார். எம்.சி.சி உடன்படிக்கையில் 70 வீதம் ஏற்கக்கூடியது. 30 வீதத்தை ஏற்கமுடியாது என அரசாங்கம் கூறி வருகிறது. இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை கூற விரும்புகிறேன். பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு என்ற பேதங்களின்றி, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து, MCC உடன்படிக்கையை துண்டுதூண்டுகளாக கிழிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தலில் எமது தரப்பு சார்பாக பிரதமரை நியமித்தால் என்ன? நான் பிரதமராக தெரிவானால்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற தயார் எனவும் தமக்கிடையே எவ்வித பிரச்சினையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...