பொருளாதார நெருக்கடி இருக்கையில் போரில் இறங்கப்போவதில்லை ஈரான்

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் இப்போது போர் வருமா அல்லது நிலைமை தணிந்து போகுமா என்பதுதான் உலகம் முழுவதும் தற்போது பேசுபொருளாகியுள்ள வினா.

ஈரானிய இராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் தீவிரமாக உருவாகியுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தைத் தவிர்க்க சர்வதேச நாடுகள் முயற்சி செய்கின்றன. அதேவேளை இருநாடுகளும் எதிரும் புதிருமாக ஆவேசமூட்டும் கருத்துகளை வெளியிடுகின்றன. நிலைமை எவ்வாறு அமையும் என்பதை தற்போது கூற முடியாதுள்ளது.

இதுஒருபுறமிருக்க, ஈரான் மற்றும் ஈராக்கை சாதாரணமாக எடை போட முடியாது. படைபலத்தில், அணு ஆயுதபலத்தில் என எல்லாவற்றிலும் அமெரிக்கா மிகப் பெரிய பலம் மிக்க நாடாக இருக்கலாம். ஆனால் வல்லமை இரு தரப்பு நாடுகளுக்குமே உண்டு.

அமெரிக்கா நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அளவுக்கு ஈரானுக்கு பலம் கிடையாது. என்றாலும், இத்தனை ஆண்டுகளாக எந்த பெட்ரோலுக்காக பல நாடுகளுடன் அமெரிக்கா யுத்தம் செய்ததோ அதை இல்லாமல்  செய்யவோ அல்லது பேரழிவையோ ஏற்படுத்தி விடவோ முடியும். இதற்கு மிகப் பெரிய ஆயுத பலம் ஈரானுக்குத் தேவையில்லை. ஆனால் அப்படிச் செய்தால் ஈரானை அமெரிக்கா சும்மா விடாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஜப்பானில் வீசியது போல் ஒரே குண்டு கொண்டு ஈரானின் ஒட்டுமொத்த சிக்கலையும் முடிக்க அமெரிக்காவால் முடியும். ஆனால் அப்படி நடக்கும் வரை ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் வேடி க்கை பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அத்துடன் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்து விடும்.

அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. விளைவு அவ்வளவு மோசமாக இருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் ஹிட்லரின் நாடு பிடிக்கும் ஆசையும் ஜப்பானின் நாடு பிடிக்கும் பேராசையும்தான். ஜப்பானை சீரழித்த அமெரிக்கா பக்கத்தில் இருந்த ஜெர்மனியை எதுவும் செய்யவில்லை. ஜெர்மனியின் பலம் மிகப் பெரியதாக அப்போது இருந்தது. உலகில் பல நாடுகளை வென்ற மகிழ்ச்சியில் ரஷ்யாவில் எடுத்த படை எடுப்புதான் அதற்கு அழிவைத் தேடி தந்தது. அதுவரை அமைதியாக இருந்த ரஷ்யா, ஆக்ரோசம் கொண்டு ஜெர்மனிய படைகளை அழித்தது.

எனவே இப்போதைய நிலையில் பெரிய அளவிலான ஆயுதங்களை அமெரிக்கா வெளியே எடுத்து வீச வாய்ப்பு இல்லை. சுலைமானியைக் கொன்றதால் சிறிது கால பதற்ற நிலைக்குப் பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஈரானின் பதில் நடவடிக்கைகளை பொறுத்தே அதுவும் இருக்கும். பதிலடி தாக்குதல்கள் இல்லாவிட்டால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடியாக போர் ஏற்படும்.

போரால் தான் அழிந்து போனாலும் பரவாயில்லை என்று அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமான சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மசகு எண்ணெய்க் கிணறுகளை ஈரான் அழித்தால், அதனால் உலகம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே எதுவுமே நடக்காமல் இருப்பதே அனைவருக்கும் நலம். அதாவது ட்ரம்ப் வார்த்தையில் சொல்வது என்றால் 'ஓல் இஸ் வெல்'.

இது இவ்விதமிருக்க, ஈரானில் புதனன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஈரானில் போர் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில்தான் அங்கு புதனன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7ரிக்டர் அளவில் பதிவானது. ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொருங்கிய சில நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஈரானில் இருந்து தெற்குப் பகுதியில் போர்சாஜன் பகுதியில் உள்ள புஷ்ஹேர் அணுமின் நிலையத்தில் இருந்து 17கி.மீ தூரத்தில் ஏற்பட்டது. இதனால் எவரும் உயிர் இழக்கவில்லை. அதேபோல் இதனால் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டன என்பது குறித்தும் விவரம் வெளியாகவில்லை.

அணுமின் நிலையம் அருகே இப்படி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது உலக நாடுகளை நிறைய சந்தேகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் உண்மையில் நிலநடுக்கம் கிடையாது. இது அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வு என்று சிலர் கூறுகிறார்கள்.  அமெரிக்காவில் இருக்கும் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் இது தொடர்பாக சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

பொதுவாக அணு ஆயுத சோதனைகள் அணு மின் நிலையத்திற்கு அருகே நடக்கும். ரஷ்யாவின் சோதனைகள் பெரும்பாலும் இப்படித்தான் நடந்துள்ளன. அதேபோல்தான் தற்போது ஈரானும் அணு ஆயுத சோதனையை அணுமின் நிலையம் அருகிலேயே நடத்தி உள்ளது என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்த சோதனையால்தான் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பெரிதாக ஈரானுக்கு எதிராக குரல் கொடுக்காமல் பின்வாங்கினார். ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் பின்வாங்கினார். ஈரானின் பலம்தான் அமெரிக்காவின் அமைதிக்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.

இதனால் ஈரானிடம் உண்மையில் அணு ஆயுதங்கள் வந்து விட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால் இரு நாடுகளிடையே போர் நடைபெறுவதற்கு, கோபமும், ஆத்திரமும்... அவ்வளவு ஏன்? இராணுவ பலமும் மட்டும் இருந்தால் போதாது.

பொருளாதார பலம் என்பது மிக மிக அவசியம். உலகின் பெரிய அண்ணனாக அமெரிக்கா இருக்கக் காரணம் அதன் இராணுவ பலம் மட்டும் கிடையாது. தன்னைத் தாங்கிப் பிடிக்க கூடிய பொருளாதார பலம் அமெரிக்காவிடம் உள்ளது. இந்த இடத்தில்தான் ஈரான் பின்னடைவைச் சந்திக்கின்றது. அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு ஈரானின் பொருளாதார பலம் ஒத்துழைக்குமா என்பதுதான் முக்கிய கேள்வி.

அணு ஆயுதம் வைத்திருப்பதாக கூறி அமெரிக்காவின் வற்புறுத்தலால், சர்வதேச சமூகம் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6நாடுகளுடன் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்படி அணுஆயுத பயன்பாட்டை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, பொருளாதாரத் தடை தளர்த்தப்பட்டு இருந்தது.

ஆனால், 2018ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து பொருளாதாரத் தடையை இறுக்கமாக்கினார். உலகத்திலேயே மசகு எண்ணெய் உற்பத்தியில் நான்காவது பெரிய நாடு ஈரான். மசகு எண்ணெய் விற்பனையை வைத்துத்தான் அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசின் வருமானம் இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத்தடை உள்ளிட்ட காரணங்களால், ஈரானின் மசகு எண்ணெய் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. பல நாடுகள் அந்த நாட்டில் இருந்து மசகு எண்ணை வாங்குவதை தவிர்க்கத் தொடங்கியுள்ளன. இதுதான் ஈரானின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

சர்வதேச நிதியக, கணக்கீட்டின்படி, 2019மற்றும் 2020ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் இறக்குமதி என்பது ஏற்றுமதி அளவை விட அதிகமாக இருக்கப் போகிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அதன் எண்ணெய் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதுதான்.

அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த மாதம் ஒரு ​ெடாலருக்கு எதிரான ஈரானின் பண மதிப்பு 140,000ரியால்களாக பலவீமடைந்துள்ளதாக அந்நிய செலாவணி வலைத்தளமான போன்பாஸ்ட். ெகாம் தெரிவித்துள்ளது. பலவீனமான பணமதிப்பால் ஈரானில் பணவீக்கம்  அதிகரித்துள்ளது.

2019மே மாதத்தில் 52%ஆக பண வீக்கம் உயர்ந்ததாக உலக வங்கி கூறியுள்ளது. ஈரானில் பெரும் விலைவாசி உயர்வுக்கு இது காரணமாக அமைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லாததால் ஈரானில் வறுமை மோசமான நிலைக்கு செல்லக் கூடும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது 2013இல் 8.1%ஆக இருந்தது, 2016இல் 11.6%ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஈரான் நேரடி போரில் ஈடுபடும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

சிரியா மற்றும் எமனில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை நீண்டு, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள  ஈரான் இராணுவத்தின் கிளை அமைப்புகள் அமெரிக்க ராணுவத்தை இலக்கு வைக்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அவர்கள். ஆனாலும் யுத்தத்தைத் தவிர்க்கவே ஈரான் விரும்பும்.

(OneIndiaTamil)


Add new comment

Or log in with...