ஜே.வி.பி முன்னாள் தலைவரின் குடும்பத்தை வெளியேறுமாறு பணிப்பு

ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தை ஒக்டோபர் 01ஆம் திகதிக்கு முன்னர் வெலிசறை, கடற்படை துறைமுகத்திலிருந்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின்போது ஜே.வி.பியின் அப்போதைய தலைவராக இருந்த ரோஹண விஜேவீர கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மனைவி மற்றும் 6 குழந்தைகள் ஆகியோர் கொழும்பிலுள்ள இராணுவ மத்திய நிலையத்தில் தஞ்சம் கோரினர்.
 
அதனை அடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அப்போதிருந்த அரசாங்கம் உத்தரவாதம் அளித்ததையடுத்து, அவர்கள் திருகோணமலை மற்றும் வெலிசறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
 
கடந்த 26 வருடங்களாக விஜேவீர குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது நாட்டில் நிலவும் சமாதான சூழலை அடுத்து அவர்கள் தற்போது தங்கியிருக்கும் கடற்படை முகாமிலுள்ள தங்குமிடத்திலிருந்து செல்லுமாறு இராணுவத்தினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

Add new comment

Or log in with...