ஶ்ரீ.ல.சு.க. வின் மத்திய குழு கூடுவதற்கான தடை நீடிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு, அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அனுமதியின்றி கூடுவதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (29) இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்தடை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி, ஶ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஜனாதிபதியின் அனுமதியின்றி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு எதிராக கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபையின் தலைவரான ஐ.ம.சு.மு உறுப்பினர் பிரசன்ன சோளங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அன்றே (ஜூலை 15) நீதிமன்றத்தால் இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


Add new comment

Or log in with...