338 பேருக்கு மருந்தாளர்களாக நியமனக் கடிதம்

 

மருந்தாளர் டிப்ளோமா பட்டத்தை (Diploma in Pharmacist) பூர்த்தி செய்த 338 பேர் மருந்தாளர்களாக (மருந்து வழங்குனர்)  நியமனம் பெற்றுள்ளனர்.

நேற்று (02) கொழும்பு நெலும்பொக்குண மண்டபத்தில் இவர்களுக்கான  பட்டமளிப்பு விழா மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், தவிசாளர் உதயனி திசாநாயக்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

சுகாதார சேவையில் 2,000 மருந்து வழங்குனர்களுக்கான தேவை காணப்படுவதோடு, இத்தேவையை நிறைவு செய்வதன் நிமித்தம் முதற்கட்டமாக 1,200 பேர் சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன் ஒரு அங்கமாக இவர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

இதேவேளை இன்னும் சில வாரங்களில் மேலும் 400 பேர் மருந்து வழங்குனர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)

 


Add new comment

Or log in with...