நாமல் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவு

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 06 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (28) கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கவர்ஸ் கோபரேஷன் நிறுவனத் தலைவர் எனத் தெரிவிக்கப்படும் நாமல் ராஜபக்‌ஷ, 'ஹெலோ கோப்' (Hello Corp) நிறுவனத்தின், ரூபா 10 இலட்சத்து 125 பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், அது தொடர்பில் அவருக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக, பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தெரிவித்தமைக்கு அமைவாக நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

குறித்த விடயம் தொடர்பான இரண்டாவது சந்தேகநபர், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர், நீதிமன்றிற்கு தெரியப்படுத்தினர்.

இதனை அடுத்து, குறித்த நபரை விமான நிலையத்தில் கைது செய்வதற்கு, சிவப்பு அறிவித்தல் (Red Alert) அடங்கிய பிடியாணையை நீதிமன்றம் வழங்கியது.


Add new comment

Or log in with...