செலான் வங்கி, தனது 'எதர காசி மெதர வாசி, சீசன் 02' குலுக்கலின் முதற்கட்ட வெற்றியாளர்களை அண்மையில் அறிமுகம் செய்தது. இந்நடவடிக்கை இலங்கைக்கு மிகவும் அவசியமான உள்ளக பணப் பெறல்களை அதிகரிக்கும் முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதோடு, 'எதர காசி மெதர வாசி' ஆனது செலான் ரெமிடென்சஸ் ஊடாக பணம் அனுப்பும், பெறும் எந்த ஒருவருக்கும் ரூ.10 மில்லியன் பெறுமதியான பணப்பரிசுகளை வழங்கக் காத்திருக்கிறது.
குலுக்கலின் 1 ஆம் கட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டபோது, சஞ்சீவ ஜயநாத் (பெறுநர் பிரிவு) மற்றும் R.W. குசுமலதா (அனுப்புனர் பிரிவு) ஆகியோர் தலா ரூ.250,000 பணப்பரிசுகளை வென்றனர்.
அதேவேளை, பெறுநர் பிரிவின் இரண்டாம் நிலை வெற்றியாளர்களில் ஆ.லோஷன், ஆ.மதுஷங்க, A.R.M.. இல்லியாஸ், U.K. கமலேஷ்வரி மற்றும் M.M.S. நஸீஹா ஆகியோரும், அனுப்புனர் பிரிவின் வெற்றியாளர்களில் U.A. பண்டார, தரிந்து முத்துதந்திரிகே, H.D. அபேசேகர, சரத் ஜயவீர மற்றும் சிவநாதன் முருகேசு ஆகியோரும் உள்ளடங்குவர். 'எதர காசி மெதர வாசி - சீசன் 02' ஆனது விரைவில் மாபெரும் இறுதிக் குலுக்கலோடு நிறைவுக்கு வரவிருப்பதோடு, இதன்போது ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளர் ரூ. 1 மில்லியன் பணப்பரிசைத் தட்டிச் செல்வார். உலகளாவிய பண அனுப்புகை சேவைகள், பரிமாற்றல் நிலையங்கள் மற்றும் வங்கிகள் உட்பட பல வெளிநாட்டு முகவர்களோடு கரம் கோர்த்துள்ள செலான் வங்கி, இலங்கைக்கு பணம் அனுப்பும் தேவையோடு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பலதரப்பட்ட பண அனுப்பல் சேவைகளைப் பெற்றுத் தருகின்றது. சவுதி அரேபியாவிலிருந்து Al Bliad வங்கியின் Enjas Mobile App ஊடாக பணம் அனுப்புபவர்கள் செலான் வங்கிக்கு பணத்தை அனுப்பும்போது எவ்வித பரிமாற்றல் கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை என்பதோடு, துரித சேவையின் ஒத்துழைப்போடு உடனடியாகப் பணத்தைப் பெற முடியும்.
மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள செலான் வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது தொலைபேசி 011 200 88 88
Add new comment