- ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி
ஒரு சில நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டு வரும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
மே 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்து.
அதற்கமைய, ஸ்ரீ லங்கா ரெலிகொம், கொழும்பு தாமரைக் கோபுரம், நோர்த் சி, திரிபோச நிறுவனம், கல்ஓயா பெருந்தோட்ட கம்பனி, தேசிய உப்பு நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனக் கம்பனி, வரையறுக்கப்பட்ட பீ.சீ.சீ. கம்பனி, அரச பொறியியல் கூட்டுத்தாபனம், மஹிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்கா, வரையறுக்கப்பட்ட லங்கா ஜெனரல் டிரேடிங் கம்பனி உள்ளிட்ட நிறுவனங்களே இதில் உள்ளடங்குகின்றன.
குறித்த அமைச்சு ஜனாதிபதியின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அதி விசேட வர்த்தமானி வருமாறு...
2334-07_T.pdf (112.2 KB)
2334-07_E.pdf (205.28 KB)
2334-07_S.pdf (58.6 KB)
Add new comment