இன்று நள்ளிரவு முதல் வாரத்திற்கான வாகன எரிபொருள் ஒதுக்கீடுகள் அதிகரிப்பு

வாகன எரிபொருள் ஒதுக்கீடுகள் இன்று நள்ளிரவு (05) முதல் அதிகரிக்கப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் ஒதுக்கீடுகளை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தேவை அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கையிருப்புகளை முன்கூட்டியே கொள்வனவு செய்துள்ளது.

அதன்படி ஒரு வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு வருமாறு...

வாகனத்தின் வகை

தற்போதைய ஒதுக்கீடு

பரிந்துரைக்கப்பட்ட புதிய ஒதுக்கீடு

முச்சக்கர வண்டி (விசேட தேவை) 

10

15

முச்சக்கர வண்டி (பொது)

5

8

மோட்டார் சைக்கிள்

4

7

பஸ் 

40

60

கார் 

20

30

நில வாகனங்கள்

15

25

லொறி

50

75

நான்கு சக்கர வாகனங்கள்

4

6

விசேட தேவை வாகனங்கள்

20

30

வேன் 

20

30

 


Add new comment

Or log in with...