Oscars 2023: சிறந்த ஆவணப்படத்துக்கான விருது 'The Elephant Whisperers'

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) ஆவண குறுந்திரைப்படம் ஒஸ்கார் விருது வென்றுள்ளது.

குனீத் மோங்கா தயாரித்து கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஒஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியத் தயாரிப்பு திரைப்படமாகும்.

மேலும் 1969 மற்றும் 1979இல் முறையே சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்காக போட்டியிட்ட ஆனந்தா பில்ட் மற்றும் ஆன் என்கவுன்டர் வித் ஃபேசஸ் ஆகிய படங்களுக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட மூன்றாவது இந்திய திரைப்படம் இதுவாகும்.

இக்குறுந்திரைப்படம், முதுமலை தேசியப் பூங்காவில் பழங்குடி தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லியின் பராமரிப்பில் உள்ள ரகு என்ற அனாதை யானைக் குட்டியின் கதையை கூறுகின்றது.

அவர்களுக்கிடையே உருவாகும் பிணைப்பை மட்டுமல்ல, அவர்களின் சுற்றுப்புறத்தின் இயற்கை அழகையும் இத்திரைப்படம் காண்பிக்கிறது.

தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறுந்திரைப்படம் 2022 டிசம்பரில் Netflix இல் வெளியிடப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...