இன்று (26) தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் அநுர குமார திஸாநாயக்க எம்.பி. உள்ளிட்ட 26 பேருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை சுற்றுவட்ட பிரதேசத்திற்குள் பிரவேசிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையை மீறுவது, இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகுமென, குறித்த கட்டளையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையும் நடத்துமாறு கோரி அரசாங்கத்தை வலியுறுத்தி, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திசைகாட்டி ஆர்ப்பாட்ட பேரணி; அநுர குமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடையுத்தரவு 11.18pm
இன்றைய தேசிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் தொடர்பில், அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு நிதியமைச்சு, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், காலிமுகத்திடல் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைய தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.ப. 1.00 - பி.ப. 8.00 வரை குறித்த பகுதிக்குள் நுழைய தடை விதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றுகூடி, பல்வேறு பாதைகளின் ஊடாக பேரணியாக ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தினால் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கமைய, விடுக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைக்கு அமைய, கொழும்பு கோட்டை நீதிமன்றம் குறித்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுமெனவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுமென தெரிவித்தும் அவ்வார்ப்பாட்டத்தை நடத்தாதிருக்கும் உத்தரவை கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை பரசீலித்த நீதிமன்றம், குறித்த சில வீதிகளுக்கு நுழைவதை தடுக்கும் உத்தரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இடம்பெற்ற தொழிற்சங்க ஆர்ப்பாட்ட பேரணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி ஆகியவற்றுக்கும் குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Media on 2023.02.26 at 1045.pdf (318.98 KB)
Add new comment