ஜனவரி முதல் நிறைவேற்று பதவி நிலை அரச ஊழியர்களின் சம்பளம் தாமதம்

அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், நிறைவேற்று பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை ஒரு சில தினங்கள் தாமதமாக செலுத்துவதற்கும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒருசில மாதங்களுக்கு குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை கூடத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுலாக்கம் செய்வதற்கு ஆரம்பித்துள்ளதுடன், அதன்மூலம் வருமானம் திரட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதால், அரச நிதியை குறிப்பிட்ட ஒழுங்குமுறைப்படுத்தும் வகையில் ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒருசில மாதங்கள் அரச செலவினங்களை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...