காலஞ் சென்ற முத்து சிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இ.தொ.கா. மரியாதை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் போசகருமான  அமரர் முத்துசிவலிங்கத்தின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அஞ்சலியை தெரிவித்துள்ளது.

இதன்போது, கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான்,  தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன்,பிரதி தவிசாளர் ராஜதுரை,பிரதி தலைவி அனுசியா,பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் உப தலைவர் பிலிப் குமார் ஆகியோர்  முத்து சிவலிங்கத்தின் உடலுக்கு கட்சியின் கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.


Add new comment

Or log in with...