முட்டையின் விலையை ரூ. 5 இனால் குறைக்க தீர்மானம்

எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் முட்டையின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அச்சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை வைத்தியர்கள் சங்கம், கோழி இறைச்சி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட உணவு உற்பத்தியாளர்கள் பிரதமரை சந்தித்து தமது பிரச்சினைகளை கலந்துரையாடியிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் டி.பீ. ஹேரத், பாவனையாளர் அலுல்கள் அதிகார சபையின் தலைவர் சிசிர சாந்த நிரியெல்ல, மில்கோ நிறுவன தலைவர் ரேணுகா பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் முட்டையின் விலை குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரூ. 55 முதல் 70 வரையான விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...