முன்னாள் ஜனாதிபதி கோட்டா தலைமறைவாக இல்லை

குற்றச்சாட்டை மறுக்கும் அரசாங்கம்:

உரிய வீஸா பெற்றே வெளிநாடு சென்றுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன, தேவையான வீஸாவை பெற்றே அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர்

குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அமெரிக்காவும் வீஸா தர மறுத்துள்ளதாகவும் கேள்வி எழுப்பப்ட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அவர் மீண்டும் நாட்டுக்கு வர இருப்பதாக அறிகிறேன்.அவருக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாதிருக்க தேவையான நடவடிக்கைகளை எமது நாட்டு அதிகாரிகள் மேற்கொள்வரென எதிர்பார்க்கிறேன் என்றார். (பா)

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...