எரிபொருள் விலை ஏற்றத்தை எதிர்த்து பெருவில் லொறி சாரதிகள் போராட்டம்

பெருவில், எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சரக்கு வாகன சாரதிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதனை கட்டுப்படுத்த பெருவில் அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள சூழலில், துறைமுக நகரான காலோவில் சரக்கு வாகன சாரதிகள் டிரக்குகளில் ஒலி எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புடன் தொடர்புபட்டே உலகளாவிய எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய செப்பு தயாரிப்பு நாடான பெருவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அங்கு உரத்தின் விலை அதிகரித்திருக்கும் சூழலில் இறக்குமதிகளை பெற அரசு தவறி இருப்பதால் உணவு விநியோகத்திலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உர விலை அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக சில விவசாய சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...